முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கைக்கு எதிராக துடுப்பெடுத்தாடுகிறது மேற்கிந்திய தீவுகள்
இலங்கை, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் ஆகிய 3 அணிகள் ஜிம்பாப்வேயில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed